Thursday, November 26, 2015
மாணவர்கள் பட்டியல்; கவனமாக கையாள அறிவுறுத்தல்.
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பட்டியல் தயாரிப்பில், எந்த தவறும் நேர்ந்து விடக்கூடாது என, பள்ளி தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு களுக்கான ஆயத்த பணி கள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுாகா வாரியாக, கடந்த கல்வியாண்டில் அமைக்கப்பட்ட மையங்களின் எண்ணிக்கை, நடப்பாண்டு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, அதிகரிக்க வேண்டிய மையங்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
தேர்வு எழுத உள்ள மாணவர் பட்டியல் தயாரிப்பில், தவறுகளுக்கு இடமளிக்கக் கூடாது. மாணவர் பெயர், விவரம், முகவரியை பெற்று, அதை பதிவு செய்யும்போது, ஆசிரியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். மாணவன் பெயர், தந்தை பெயர் சரியா என்பதை, மீண்டும் ஒருமுறை சரிபார்க்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பட்டியலில் தவறு இருந்தால், யாரால் தவறு நேர்ந்தது என்பதை கண்டறிந்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசு ஆலோசித்து வருகிறதுஎன்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.