சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் டிசம்பர் 12-ஆம் தேதி வரை மீண்டும்
ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால், ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை ஒத்திவைத்து, பின்னர் மறு தேதிகளை அறிவித்தன. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், அறிவிக்கப்பட்ட மறு தேதிகளிலும் தேர்வுகள் நடைபெறவில்லை. இந்த நிலையில், வரும் 12-ஆம் தேதி வரை பல்கலைக்கழகத் தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.