WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 14, 2015

சிவில் சர்வீஸ் பிரதான தேர்வை 2 மாதங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான மத்திய அரசுப்
பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் பிரதான தேர்வை இரண்டு மாதங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பதை தனிப்பட்ட முறையில் நீங்கள் அறிவீர்கள். சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் இப்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. வெள்ளப் பாதிப்பு காரணமாக மின்சார விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தடைபட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் நாளை திங்கள்கிழமைதான் (டிச.14) திறக்கப்படுகிறது. தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகளும், பள்ளித் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான பிரதான தேர்வை தேர்வு டிசம்பர் 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்தத் தேர்வு எழுதும் மாணவர்கள் சென்னையில்தான் தங்கி இந்தத் தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்துகின்றனர். வெள்ளத்தின் காரணமாக கடந்த சில வாரங்களாக இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டதால், மாணவர்களால் தேர்வுக்குத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்தமுடியவில்லை. கடந்த பிற பகுதி மாணவர்கள் தடையின்றி தங்களைத் தயார்செய்து வரும் வேளையில், தமிழக மாணவர்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். இந்த இன்னல்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, டிசம்பர் 18 முதல் பிரதான தேர்வு நடத்தப்பட்டால அது தமிழக மாணவர்களை மிகவும் பாதிக்கும். பெருவாரியான மக்களைப் பாதிக்கும் மிகப்பெரிய பேரழிவாக வெள்ளப் பாதிப்பு இருந்ததால், இந்தப் முதன்மை தேர்வை குறைந்தபட்சம் 2 மாதங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும். அதன்மூலம் தமிழகத்திலிருந்து இந்தத் தேர்வை எழுதும் மாணவர்கள் தங்களை முழுமையாகத் தயார்செய்துகொண்டு நாட்டின் பிற பகுதி மாணவர்களோடு போட்டியிட முடியும் என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.