WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 15, 2015

விஏஓ தேர்வுக்கு டிச.31 வரை விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி.

விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இந்தத் தேர்வை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று டிசம்பர் 14-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் பெய்த கனமழை மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31 ஆம் தேதி வரையும், விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி (ஜன.2) வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.