WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 4, 2015

மத்திய அரசில் 7.47 லட்சம் பணியிடம் காலி: நிதித்துறையில் 46 சதவீத பணியாளர் இல்லை.

மத்திய அரசுத்துறைகளில் 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

நிதித்துறையில் மட்டும் 46 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.மத்திய அரசில் 56 துறைகள், யூனியன் பிரதேசங்களின் அரசு துறைகள் மற்றும் டில்லி போலீஸ் துறைகளில் 40.48 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில் சென்ற ஆண்டு வரை 33.01 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அறிவியல் தொழில்நுட்பத் துறையில் 12,503 பணியிடங்களில் 5,823 காலியாக உள்ளன. இத்துறையில் அதிகபட்சமாக 47 சதவீதம் காலியாக இருக்கின்றன. நிதித்துறையில் 1,76,260 பணியிடங்களில் 95,863 காலியாக உள்ளன. இது 46 சதவீதம். விமான போக்குவரத்துறையில் 44 சதவீதம், சிறுபான்மைத்துறை 41, பாதுகாப்புத்துறையில் 32, உணவு வழங்கல்துறை 31, வனத்துறை 37, வெளியுறவுத்துறை 34, கனரக தொழிற்சாலை 34, மனிதவள மேம்பாட்டுத்துறை 35 சதவீதம் என, அனைத்து துறைகளிலும் சராசரியாக 18 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த விபரம் 7வது ஊதியக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.