WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, December 11, 2015

டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு.

நகர மற்றும் ஊரகமைப்புத் துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான
எழுத்துத் தேர்வு, நவ., 13ம் தேதி, 'ஆன் - லைன்' தேர்வாக நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் தள்ளி வைக்கப்பட்ட, அந்த தேர்வு, வரும், 27ம் தேதி நடக்கிறது. இதேபோல், உதவிப் பொறியாளர் - சிவில் மற்றும் உதவி மருத்துவ அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உதவி பொறியாளர் பணிக்கு, டிச., 28 முதல், 30 வரை சான்றிதழ் சரிபார்ப்பு; 2016 ஜன., 11 முதல், 14ம் தேதி வரை, நேர்முக தேர்வு நடைபெறும். உதவி மருத்துவ அலுவலருக்கு, டிச., 29 முதல், 31 வரை சான்றிதழ் சரிபார்ப்பு; ஜன., 20 முதல், 22ம் தேதி வரை, நேர்காணல் நடக்கும் என, அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.