WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, December 13, 2015

நாளை முதல் பள்ளி-கல்லூரிகள் திறப்பு!!

             
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளி - கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில், கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை தொடர்ந்ததால், ஒவ்வொரு நாளாக விடுமுறை நீட்டிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் 26 ஆம் தேதி சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டன. அன்றைய தினமும், 27, 28 ஆம் தேதிகளிலும் பள்ளி-கல்லூரிகளில் வகுப்புகள் நடந்தன.

ஆனால், மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியதால் 29 ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு நாளாக பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வந்தது. இவ்வாறு 2 வது கட்ட விடுமுறையும் 15 நாட்கள் தொடர்ந்தது. மொத்தமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 33 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கல்வி நிறுவன வளாகங்களில் தேங்கிய மழைநீர் முற்றிலும் அகற்றப்பட்டதுடன், வகுப்பறைகளும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு தொற்றுநோய் பாதிக்காத வகையில், பள்ளி - கல்லூரி வளாகத்தில் பிளீச்சிங் பவுடர்கள் தூவப்பட்டு கொசு மருந்தும் அடிக்கப்பட்டு வருகிறது.

மழை வெள்ளத்தினால், மின் சாதனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளில் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்டவற்றிற்கான ஸ்விட்சுகளை மாணவர்கள் தொடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நாளன்று மாணவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக சுமார் ஒரு மாதமாக மேலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு நாளை முதல் பள்ளி - கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

பள்ளிகள் திறக்கப்படும் நாளன்று மாணவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.