தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி 11-முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப் புறநகர் பகுதிகளில் பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மாணவர்களின் நோட்டு புத்தகங்கள், சீருடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து 33 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர், நிலைமை சீரடைந்ததையடுத்து டிசம்பர் 14-ம் தேதி 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, பாடச்சுமை காரணமாக அடுத்தடுத்து தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலையில் மாணவர்கள் உள்ளதால், அரையாண்டுத் தேர்வுகளை ரத்து செய்து இறுதி தேர்வை நடத்த பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக, தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஜனவரி 11-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.