WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, December 20, 2015

விடுமுறை நாட்களில்ஆசிரியர்களுக்கு பயிற்சி.

பள்ளி நாட்களில், பயிற்சிக்கு வர, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 'விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வர வேண்டும்' என கல்வித்துறை
உத்தரவிட்டுஉள்ளது.பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி 
இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், ஆசிரியர்களுக்கு பணி குறித்த சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.இந்த பயிற்சிக்கு, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்; பாடம் நடத்தக் கூட நேரம் இல்லாத நிலையில், 
பயிற்சிக்கு அழைப்பதாக குற்றஞ்சாட்டினர்.இதையடுத்து, கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் பண்டிகை விடுமுறை நாட்களில், மூன்று நாட்கள் பயிற்சிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில், டிச., 28 முதல், 30ம் தேதி வரை, 6 - 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கணித பாடப் பயிற்சி நடத்தப்படும். இதில், ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, கல்வித் துறை உத்தர விட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.