WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 16, 2015

அடுத்த வாரம் மீண்டும் கன மழை? தனியார் வானிலை நிறுவனங்கள் எச்சரிக்கை.

'கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில், தமிழகத்தில் மீண்டும் கன மழை
பெய்யலாம்' என, தனியார் வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன. 'வங்க கடலின் தென்மேற்கு பகுதியில், புதிய காற்று அழுத்த தாழ்வு நிலை, இந்த இறுதி வாரத்தில் உருவாகலாம்' என, 'ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து, அந்த மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை:இம்மாத இறுதி வாரத்தில் உருவாகும், காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழக கடலோர மாவட்டங்களில், மிதமான மழை துவங்கி, அதன்பின், தீவிரம் அடையலாம். இதன்பின், காற்று அழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, கேரளா மற்றும் கர்நாடகாவில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே தகவல்களை, வேறு சில தனியார் வானிலை ஆய்வு மையங்களும் வெளியிட்டுள்ளன. ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று முதல், டிச., 19 வரையிலான வானிலை அறிவிப்பை மட்டுமே வெளியிட்டுள்ளது. அதில், 'லட்சத் தீவு மற்றும் தென்கிழக்கு அரபி கடலில், காற்று மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், டிச., 19 வரை மழை பெய்யும்' என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.