சென்னையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகப்
பள்ளிகள் நீண்ட விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், அடுத்தடுத்து தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் கவலை பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக தொடர்ந்து 33 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 14 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அரையாண்டு தேர்வு மற்றும் பொதுத்தேர்வு அடுத்தடுத்து எதிர்கொள்ள உள்ள நிலையில் மாணவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தேர்வை ஒத்தி வைக்கக்கூடாது என்றும் தேர்வை எளிமையாக நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் மாணவர்களிடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற அளவில் மாணவர்களிடையே பலவித கேள்விகள் நிலவி வருகின்றது. இதற்கு, தமிழக அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.