WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 1, 2015

கனமழை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு.

தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் அண்ணா பல்கலைக் கழக மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், குறிப்பாக சென்னையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்ததோடு, இன்றும் கன மழை நீடித்து வருகிறது. இந்நிலையில் மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதே போல் சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன. 

திருவள்ளூர் பல்கலைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப் பட்டன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.