WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 23, 2016

நாளை டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு.

அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வு,நாளை நடக்கிறது. திருப்பூர், தாராபுரம், உடுமலை வருவாய் கோட்டங்களில், 35 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மாவட்ட அளவில், 16 ஆயிரத்து, 459 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதை கண்காணிக்க, 54 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஐந்து பறக்கும் படைகள், எட்டு மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் ஜெயந்தி தலைமை வகித்தார். 

தேர்வு மையங்களை வீடியோ மூலம் கண்காணிக்க வேண்டும். மொபைல் போன் எடுத்துவர அனுமதிக்க கூடாது. மையங்களுக்கு செல்ல, சிறப்பு பஸ் ஏற்பாடு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.