தமிழக அரசின் இலவச லேப் - டாப் கிடைக்காதவர்களுக்கு கொடுப்பதற் காக, தமிழ்நாடு மின்னணு கழகம் எனும், 'எல்காட்' நிறுவனத்தினர், 2014 - 15 மற்றும்
2015 - 16 கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து, 10.5 லட்சம் லேப் - டாப்களை கொள்முதல் செய்துள்ளனர். இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இரு கல்வியாண்டுக்கும் சேர்த்து தர வேண்டிய லேப் - டாப்கள் அனைத்தும், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி முடிவடைந்தது.
எனினும், சில பள்ளிகள் விடுபட்டிருப்பதாக, தகவல் வந்துள்ளது. அதற்காகவே, சில ஆயிரம் லேப் - டாப்கள் உபரியாக வைக்கப்பட்டுள்ளன. விடுபட்டோரின் பட்டியலை, பள்ளிக் கல்வித் துறை தந்தால், அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.