WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 23, 2016

வெறும் அறிவிப்போடு நின்றது சிறப்பாசிரியர்கள் நியமனம்!

                                  

சிறப்பாசிரியர்கள் நியமனம் குறித்து சட்டசபையில் அறிவித்து நான்கு மாதங்களாகியும், இன்று வரை ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு அறிவிக்காததால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

2015 செப்.,2 ல் 1,188 விளையாட்டு, ஓவியம், தையல் சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் பார்வையில்லாதவர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் ஆகிய மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 1 சதவீதம் ஒதுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.

இதன்படி தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் ஊனமுற்றோருக்கான 3சதவீத ஒதுக்கீட்டில் விளையாட்டு, ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களில் எத்தனை இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக சொல்லி போட்டித் தேர்வை நடத்தாமல் காலதாமதப்படுத்தி வருகின்றனர்.

தையல் ஆசிரியை பிரியதர்ஷினி கூறுகையில், 2012 ஏப்ரலுக்கு பின் 4 ஆண்டுகளாக சிறப்பு ஆசிரியர் நியமனம் செய்யவில்லை. தற்போது சிறப்பு ஆசிரியர் பணிக்காக சுமார் 90ஆயிரம் பேர் தயார் நிலையில் இருக்கின்றனர். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது, என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.