WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 23, 2016

10ம் வகுப்பு திருப்புத் தேர்வு பிப்., 1ல் துவக்க உத்தரவு.

                                         

பத்தாம் வகுப்பு முதல் திருப்புத் தேர்வு, பிப்., 1ல் துவங்குகிறது. முதல் மற்றும் இரண்டாம் திருப்பு தேர்வுகளை, மார்ச் 9க்குள், நடத்தி முடிக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மழை வெள்ள பாதிப்பால் சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை விடப்பட்டதால்,பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிச., மாதம் நடக்க வேண்டிய அரையாண்டு தேர்வு, தற்போது நடந்து வருகிறது. தொடர்ந்து, பத்தாம் வகுப்புக்கான, இரண்டு திருப்பு தேர்வுகளை பிப்., 1ல் துவங்கி, மார்ச் 9ல் முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிப்., 1ல் தமிழ் முதல் தாள், 2ல் இரண்டாம் தாள், 3ல் ஆங்கிலம் முதல் தாள், 4ல் இரண்டாம் தாள், 6ல் - கணிதம், 8ல் - அறிவியல், 10ல் - சமூக அறிவியல் பாடத்துடன் முதல் திருப்பு தேர்வு நிறைவடைகிறது. இரண்டாம் திருப்பு தேர்வு, 15ல் கணித பாடத்துடன் துவங்குகிறது; 16ல் அறிவியல், 17ல் சமூக அறிவியல், மார்ச் 5ல் தமிழ் முதல் தாள், 7ல் இரண்டாம் தாள், 8ல் ஆங்கிலம் முதல் தாள், 9ல் இரண்டாம் தாள் என, திருப்புத்தேர்வை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு, 27ல் நிறைவடைகிறது. பிப்., மாதம், செய்முறை தேர்வு நடக்க உள்ளது. இதற்கிடையே, பிப்., மாதத்திலேயே திருப்புத்தேர்வையும் முடிக்க பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அடுத்தடுத்து தேர்வு குறுக்கிடுவதால், செய்முறை தேர்வுக்கு படிப்பதா, திருப்புத்தேர்வுக்கு படிப்பதா,பொதுத்தேர்வுக்கு படிப்பதா என்பதில் மாணவ, மாணவியருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.