WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 9, 2016

கற்றல் கையேடு வழங்க மெத்தனம்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட, கற்றல் கையேடு புத்தகத்தை, சென்னை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதில், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் விடுமுறையால், புத்தகம் வாங்க வந்த ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கற்றல் கையேடு வினியோக மையம் அமைக்கப்பட்டு, அங்கு சென்னை மாவட்ட பள்ளி ஆசிரியர்கள், புத்தகங்களை பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டது. பல பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள், மாணவர் பட்டியலுடன், மாநில மகளிர் பள்ளிக்கு, நேற்று முன்தினம் கையேடு புத்தகம் வாங்க காத்திருந்தனர். ஆனால், அந்த மையம் பூட்டப்பட்டிருந்தது. புத்தகம் வழங்கும் அதிகாரி நீண்ட நேரம் வராததால், ஆசிரியர்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.