பார்வையற்றோர் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி
அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு அதிகாரி கண்ணன் தெரிவித்தார்.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் சார்பில் பார்வையற்றோருக்கான 2 ஆண்டு சுயவேலைவாய்ப்பு பயிற்சியின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இதில், கண்ணன் பேசியதாவது:
காகிதத்தில் அலுவலக உறைகள், கோப்புகள், பதிவேடுகள் ஆகியவை தயாரிக்கும் பயிற்சி அளித்து சுயவேலைவாய்ப்பில் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, புதிதாக கழிவுக் காகிதம் மூலம் பல்வேறு பைகள் தயாரிப்புப் பயிற்சி, காட்டன் துணிகளில் இருந்து அழகுசாதனப் பொருள்கள், நார்ப் பொருள்களில் இருந்து கால் மிதியடிகள், தையல் ஆகியவற்றில் 30 பேருக்கு 2 ஆண்டுகள் பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளனர்.
இதில், 10-ஆம் வகுப்பும், பட்டப்படிப்பு வரையிலும் படித்த பார்வையற்றோர் இரு பாலரும் உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர், குரூப்-1, 2 தேர்வு எழுதுவதற்கான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவர்கள் எந்தெந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும், அது தொடர்பான பாடங்களை மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவற்றில் பதிவேற்றம் செய்து காதொலிக் கருவி மூலம் எளிதாகப் பயிற்சி அளிக்க முடியும் என்றார் அவர்.
தனியார் நிதி நிறுவன மேலாளர் சி.சுப்பையா. சங்கத் தலைவர் கே.வி.பக்கிரிசாமி, உதவித் தலைவரும், காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியருமான இ.ராஜேஸ்வரி, பார்வையற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற முதல்வரும், உதவித் தலைவருமான கே.தியாகராஜன், செயலர் சந்திரசேகரன், பயிற்றுநர்கள் ஜெயஸ்ரீ, அகிலா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.