WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 29, 2016

சாலை மறியல் நடத்த ஜேக்டோ தீர்மானம்.


தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் சாலை மறியல் நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர்
இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் போராட்ட ஆயத்த கூட்டம், விழுப்புரம் பி.என்., தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்ட தொடர்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், வரும் 30,31 மற்றும் பிப்., 1 ஆகிய தேதிகளில் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியல் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தம்பு ராமதாஸ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.