போதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், நேற்று, ’சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சின்னூ கிராம தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தவர் சின்னதம்பி, 52. இவர், கடந்த 9ம் தேதி, மது குடித்து போதையில் பள்ளிக்கு வந்தார்.
மாணவர்களின் பெற்றோர், தலைமை ஆசிரியர் சின்னதம்பிக்கு தர்ம அடி கொடுத்தனர். போலீசார் அவரை மீட்டுச் சென்றனர். ஜோலார்பேட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில், சின்னதம்பி தினமும் குடித்து விட்டு, போதையில் பள்ளிக்கு வந்து கலாட்டா செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் சின்னதம்பியை நேற்று சஸ்பெண்ட் செய்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.