WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, January 24, 2016

நிதி நெருக்கடியில் தள்ளாடுகிறதா தமிழக அரசு?

வருவாயை பெருக்க போதிய அக்கறை காட்டாததால், முந்தைய ஆண்டை விட, வரி வருவாயில் பின்னடைவு ஏற்பட்டு, நிதி நெருக்கடியில் தமிழக அரசு தள்ளாடுகிறது.
இதே நிலை நீடித்தால், 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை, வருவாய் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழக அரசு, பட்ஜெட் அறிவிப்பின் படி, அரசின் வரி வருவாய், 2014 - 15ல், 85 ஆயிரத்து, 772 கோடி ரூபாய். நடப்பு நிதி ஆண்டில், 12.02 சதவீத வளர்ச்சியுடன், 96 ஆயிரத்து, 83 கோடி ரூபாயாக இருக்கும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில், வணிக வரித்துறையின் பங்கு, 75 சதவீதம். இந்த நிதி ஆண்டில், 72 ஆயிரத்து, 68 கோடி ரூபாய்க்கு வணிக வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வருவாய்;
இதன்படி, 2015 டிச., இறுதி வரை, 57 ஆயிரத்து, 411 கோடி ரூபாய் வசூலித்திருக்க வேண்டும். ஆனால், ஜன., 20 வரை, 47 ஆயிரத்து, 605 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. இது இலக்கை விட, கிட்டதட்ட, 10 ஆயிரம் கோடி ரூபாய் குறைவு. இன்னும்,இரண்டு மாதங்களில் கடும் முயற்சி செய்தாலும், 58 ஆயிரம் கோடி ரூபாய்வரையே வசூலிக்க முடியும். வணிக வரித்துறை; இதனால், வணிக வரித்துறையில் மட்டும், 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை பற்றாக்குறை ஏற்படும். சலுகைகள் அடிப்படையில், வணிகர்களுக்கு திருப்பி செலுத்த வேண்டிய தொகை; வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிய காசோலைகள் என, 4,000 கோடி ரூபாய் போய்விடும் என்பதால், 18 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.பதிவுத் துறையில், 2014 - 15ல், 10 ஆயிரத்து, 470 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது, நடப்பு ஆண்டில், 10 ஆயிரத்து, 385 கோடிரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 6,600 கோடி ரூபாய் மட்டுமே வந்துள்ளது. கட்டுமானங்கள் குறைவு, பத்திரப்பதிவு குறைந்துள்ளதால், இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 8,000 கோடி ரூபாய் வரை துண்டு விழும்.
பற்றாக்குறை;
இந்த இரண்டும் தான் வருவாய்க்கான முக்கிய துறைகள். இதில், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பற்றாக்குறை வரும். மதுபானங்கள் மூலம் கிடைக்கும் ஆயத் தீர்வை வரி, 7,296 கோடி ரூபாய்; மோட்டார் வாகன வரி வகையில், 4,882 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக வரியை ஒப்பிடும்போது இவை மிக குறைவு என்றாலும், முந்தைய ஆண்டை விட, வருவாய் குறைவு தான் என, துறை அதிகாரிகள் உறுதி செய்கின்றனர்.இதே நிலை நீடித்தால், ஒட்டுமொத்த வருவாய் இலக்கான, 96 ஆயிரத்து, 83 கோடி ரூபாயில், 75 ஆயிரம் கோடி ரூபாயை எட்டுவது கடினம். 20 ஆயிரம் கோடி முதல், 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி வருவாயில் பற்றாக்குறை ஏற்படும் என, வரி ஆலோசகர்கள்கூறுகின்றனர்.
சிக்கல்ஏன்?
கடந்த ஆண்டில், வருவாய் இலக்கை எட்ட முடியாமல் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட தமிழக அரசு, முன் கூட்டியே வரி வசூல் என்ற கிடுக்கிப்படி போட்டது. கடன் சுமை, 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி உள்ள நிலையில், வரி வருவாயை மேம்படுத்த அரசு அக்கறை செலுத்தாமல் கோட்டை விட்டது தான் முக்கிய காரணம் பழைய வரி பாக்கிகளை வசூலிப்பது; வரி ஏய்ப்பை தடுப்பதில் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லைஅரசுக்கு பெருமளவு வருவாய் தரும் வணிக வரித்துறையில், 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. முக்கியத்துறையில் உள்ள காலி இடங்களை நிரப்ப அரசு ஆர்வம் காட்டவில்லைநிலுவையில் உள்ள, வரி சார்ந்த, 10 ஆயிரம் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தால், 15 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும். இதில் அரசு கவனம் செலுத்தவில்லை.
இலக்கை எட்ட முடியாது;
அடுத்த, இரண்டு மாதங்களில் பெரிதாக பண்டிகை காலம் இல்லை; சட்டசபை தேர்தலும் வருவதால், 'எதிர்பார்த்த வரி வருவாய் இலக்கை எட்ட முடியாது' என, வணிக வரி ஆலோசகர்கள் கூறுகின்றனர். அரசு அதிகாரிகள் தங்களுக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது என்பதால், 'வளர்ச்சி வேகம் சரியாக உள்ளது' என, ஆவணங்களில் மட்டும் கணக்கு காட்டுவதாக குற்றச்சாட்டு உள்ளது. சிக்கலான நிலையை உணர்ந்து தமிழக அரசு, ஆட்சிக்காலம் முடிய சில மாதங்களே உள்ளதால், வருவாய், செலவு சார்ந்த துறைகளை அழைத்துச் பேசி, செலவுகளை குறைப்பதோடு, வரி வருவாயை மேம்படுத்த, போதிய முன்னேற்பாடுகளை செய்வது அவசரத் தேவை.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.