இன்று அன்னை தெரசா பல்கலை கழகம் அடுத்த மாதம் 21-2-2016 தேதியில் செட் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த திடீர் அறிவிப்பால்
விண்ணப்பதாரர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.தேர்வு எழுத அளிக்கப்பட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லை என கவலை தெரிவித்துள்ளனர்.மேலும் நடப்பாண்டில் முதுகலை இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களும் செட் தேர்வுக்கு தயராவதா இல்லை பல்கலை கழக பாடத்திட்டத்திற்கு தயாராவதா என புலம்புகின்றனர்.இது மட்டுமல்லாமல் தேர்வு கட்டணம் அதிகம் (பொது- ரூ.1500 , MBC&BC&BCM -1250 மற்றும் SC,/ST/PH&VH ரூ500) என நிர்ணயித்துள்ளது.இது மாணவர்களிடையே அரசின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைய வைத்துள்ளது.மேலும் அன்னை தெரசா பல்கலை கழகத்தில் துணை வேந்தர் இல்லாமல் செட் தேர்வு நடத்துவதால் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு நடத்த வேண்டும்.அது மட்டுமல்லாமல் ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையில் புதிய தேர்வு தேதியுடன் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்து மறு அறிவிப்பினை விரைவில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு செட் நெட் சங்கத்தின் மண்டல பொறுப்பாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.