WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, February 14, 2016

அரசு ஊழியர்கள் போராட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு.


''தமிழகத்தில் நாளை (பிப்.,15) நடக்கும் அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பங்கேற்காது,'' என, மாநில தலைவர் பேட்ரிக் ரேமன்ட் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: தொகுப்பூதிய
காலத்தை பணிக்காலமாக அறிவித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தொடக்கக் கல்வி துறையில் நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளித்தல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. பிப்.,௧௬ல் பட்ஜெட் தாக்கலாகும் வரை காத்திருப்போம். கோரிக்கைகள் நிறைவேற்றாத பட்சத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம், என்றார். நிர்வாகிகள் வீரசிம்மன், ஜெயக்குமார், கிருபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.