WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, February 8, 2016

கல்வி வணிக பொருள் அல்ல அரசுக்கு ஆசிரியர்கள் கண்டனம்.


'கல்வியை வணிக பொருளாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தியுள்ளனர். கோவில்பட்டியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநாடு பிப்.5
ல் துவங்கியது. 3 நாள் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் முக்கிய நிர்வாகிகள் பேசினர்.மாநில துணைத்தலைவர் ஜோசப்ரோஸ் தலைமை வகித்தார்.அரசு ஊழியர் சம்மேளன மாநிலத்தலைவர் முத்துசுந்தரம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: மத்திய அரசு ஆசிரியர்கள் இணையான ஊதியம் இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டம் அமல் படுத்த வேண்டும். இலவச கல்வி உரிமையை பாதுகாக்க அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும். தமிழ்வழிக் கல்வியை பாதுகாக்க, ஆங்கில சுய நிதிப்பள்ளிகளை கட்டுப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும். கல்வி,சுகாதாரம், வேளாண் திட்டங்களுக்கு மானியங்களை குறைக்க கூடாது, மத்திய அரசு கல்வியை வணிக பொருளாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என, வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நேற்று மாலை ஆசிரியர்கள் பங்கேற்ற ஊர்வலமும், சவுந்திரராஜன் எம்.எல்.ஏ., பங்கேற்ற பொதுக்கூட்டமும் நடந்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.