WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 30, 2016

10-ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு: எழுத்துப் பிழையால் குழம்பிய மாணவர்கள்.

10-ஆம் வகுப்பு ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வில், எழுத்துப் பிழையுடன் அமைந்திருந்த ஒரு வினாவால் குழப்பம் அடைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. சுமார் 10.72 லட்சம் மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வுகளை எழுதுகின்றனர்.
இந்த நிலையில், ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்வு பொதுவாக எளிதான வினாக்களுடன் இருந்ததாகவும், கூடுதலான மதிப்பெண்கள் பெற வாய்ப்பு இருப்பதாகவும் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் மொழிமாற்றம் செய்யக் கூடிய பகுதியில், சென்னை உள்நாட்டு விமான நிலையம் தொடர்பான வினாவாக இடம் பெற்றிருந்த 19-ஏ வினாவில், இரு எழுத்துப் பிழைகள் இருந்தன.
வினாவின் மையக் கருத்தான விமான நிலையம் என்ற வார்த்தையே தவறாக இருந்ததால் குழப்பம் அடைந்ததாகவும், இதனால் அந்த முதல் வினாவுக்கு மாற்றாக வரைபடம் மூலம் விளக்கம் அளிக்கக் கூடிய 19-பி வினாவைத் தேர்வு செய்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், சென்னை சுற்றுப் பகுதி மாணவர்களுக்கு மட்டுமே இந்த மொழிமாற்ற வினா எளிதானதாக இருந்திருக்கும் என்று ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் தரப்பிலும் கூறப்பட்டது.
முறைகேடு- 8 பேர் பிடிபட்டனர்: இதற்கிடையே, ஆங்கிலம் 2-ஆம் தாள் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 8 தனித் தேர்வர்கள் பிடிபட்டனர். அதிகபட்சமாக ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 3 பேர் பிடிபட்டதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.