WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, March 17, 2016

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் ஏப்.20க்குள் முடிக்க திட்டம்.

                              


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்.,20க்குள் முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 44மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதி வருகின்றனர். தமிழ்,ஆங்கிலம்,வேதியியல் தேர்வுகள் முடிந்தன. அரசுத் தேர்வுத்துறை திட்டமிட்டபடி தமிழ், ஆங்கிலம் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. 74 மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் திருத்தும் பணி நடக்கிறது.

ஏப்.,1 ம் தேதி இயற்பியல் தேர்வு நடக்கிறது. 20ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்.,13ம் தேதி வரை நடக்கிறது. விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.,1 முதல் 25ம் தேதி வரை 79 மையங்களில் நடக்கிறது.

மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் வருவதால், விடைத்தாள்களை சரியாகத் திருத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.