தொடக்க கல்வி டிப்ளமோ தேர்வு எழுதியவர்கள் மறு கூட்டல் மற்றும், மறு மதிப்பீட்டுக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மே 2015 தொடக்க கல்வி பட்டய தேர்வு விடைத்தாள் நகல் பெற கடந்த பிப்ரவரி 16 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் கடந்த 12ம் தேதி முதல் இன்று (மார்ச் 16) வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மறு கூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். மறு கூட்டலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.205, மறு மதிப்பீட்டுக்கு ரூ.505 செலுத்தி அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நாளை 17ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.