தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 32 மாணவர்கள் பிடிபட்டனர்.
தமிழகம் மற்றும்
புதுவையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மொழிப் பாடம் 2-ஆம் தாள் தேர்வு புதன்கிழமை (மார்ச் 16-ஆம் தேதி) நடைபெற்றது.
இதில், எளிதான வினாக்களுடன் தேர்வு இருந்ததாகவும், 80-க்கும் அதிகமான மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, மொழிப் பாடம் 2-ஆம் தாள் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 32 தனித் தேர்வர்கள் பிடிபட்டனர். அதிகபட்சமாக வேலூரில் 20 தனித் தேர்வர்களும், திருவள்ளூரில் 11 தனித் தேர்வர்களும் பிடிபட்டனர். திருவண்ணாமலையில் ஒரு தனித்தேர்வர் பிடிபட்டார்.
ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மார்ச் 22-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.