பிளஸ் 2 பொதுத்தேர்வில், நேற்று வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு, 'காமர்ஸ்' தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மொத்தமுள்ள, 200
மதிப்பெண்களில், இரண்டாம் பிரிவு (பார்ட் பி) பகுதியில், தலா, நான்கு மதிப்பெண்களுக்கு, 10 கேள்விகளை எழுத வேண்டும். இதில், 'சாய்ஸ்' அடிப்படையில் இடம் பெற்ற, 15 கேள்விகளும், பாடங்களின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. சராசரி மாணவரும் தேர்ச்சி பெறும் வகையில், நேற்றைய தேர்வு அமைந்து இருந்தது.
இதுகுறித்து, வணிகவியல் ஆசிரியர் எஸ்.என்.ஜனார்த்தனன் கூறும்போது, ''புளூ பிரின்டில் கூறியபடி, புத்தகத்தின் முதல், மூன்று பாடங்களில் இருந்து மட்டுமே, 109 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெற்றன. அதனால், முதல் மூன்று பாடம் படித்தாலே, அவர்களுக்கு தேர்ச்சி உறுதி. வணிகவியலை பொறுத்தவரை, அதிக தேர்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது,'' என்றார்.
நேற்றைய தேர்வில், நான்கு பள்ளி மாணவர் உட்பட, ஒன்பது பேர் காப்பியடித்து பிடிபட்டதாக, அரசு தேர்வுத் துறை இயக்ககம் தெரிவித்து உள்ளது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.