பிளஸ்–2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்பட்டதால் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவிகள் கருத்து கூறினர்.
பிளஸ்–2 தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்–2 பொதுத்தேர்வு கடந்த 4–ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழ் முதல்தாள் மற்றும் தமிழ் 2–ம்தாள் தேர்வுகள் முடிவடைந்து உள்ளன. நேற்று ஆங்கிலம் முதல்தாள் தேர்வு நேற்று நடந்தது.
மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு ஒரு வித அச்சத்துடனேயே நேற்று காலை வந்தனர். ஆனால் தேர்வு எழுதிவிட்டு மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு திரும்பினர்.
தேர்வு எளிது
இதுகுறித்து எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் ஆங்கிலம் முதல்தாள் தேர்வை எழுதிவிட்டு வந்த மாணவிகள் கூறியதாவது:–
தேர்வில் அனைத்து கேள்விகளும் பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. ஆனால் வழக்கமாக அரசு தேர்வுகளில் கேட்கக்கூடிய பல கேள்விகள் கேட்கப்படவில்லை. அவற்றை எதிர்பார்த்து படித்த எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.
தேர்வில் 1 மதிப்பெண், 2 மதிப்பெண் கேள்விகள் சற்று எளிதாகவே இருந்தது. ஆனால் 6 மற்றும் 10 மதிப்பெண் கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. ஒரு வித தெம்புடன் தேர்வை எழுதி உள்ளோம்.
பொதுவாக பார்த்தால் ஆங்கிலத் தேர்வு எளிதாக இருந்து என்று சொல்லலாம். நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்றும் நம்புகிறோம். இதேபோன்று எங்களுடைய அனைத்து தேர்வுகளும் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம்
இவ்வாறு மாணவிகள் கூறினர்.
தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) ஆங்கிலம் 2–ம் தாள் தேர்வு நடக்கிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.