WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 26, 2016

செவிலிய பட்டயப்படிப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி.


செவிலிய பட்டயப் படிப்புக்கான பருவத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 7-ஆம் தேதி கடைசித் தேதியாகும். செவிலியப் பட்டயப் படிப்புக்கான ஜூலை-
ஆகஸ்ட் 2016 பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் விண்ணப்பம், தேர்வுகளை நடத்தும் தகுதியுள்ள ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஆகியவற்றை அந்த பயிற்சிப் பள்ளிகள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 100 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தை சென்னையில் செல்லத்தக்கதான வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம், தேர்வுக்கான விண்ணப்பங்களை தலைவர், செவிலிய பட்டயப் படிப்புக்கான தேர்வு வாரியம், மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை- 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.