கடந்த, 2012-13ம் ஆண்டில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, சம்பளம் கிடைக்காமல் அவதிப்பட்ட பிரச்சனைக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த, 2012- 13ம் ஆண்டில், 100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. இதில், ஒரு பள்ளிக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல்,வரலாறு, பொருளியல், வணிகவியல் என, 9 புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டு, 900ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான பணி நீட்டிப்பு ஆணை, கடந்த, 2015, டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது.
இதனால், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாத சம்பளம் பெற முடியாமல், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்டுள்ள இந்த ஆணையில், ஐந்தாண்டு தொடர் நீட்டிப்பு ஆணைக்கு தமிழக அரசை கோரியுள்ளதாகவும், அதற்கு முன், தற்காலிகமாக ஓராண்டு பணிநீட்டிப்பு ஆணை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், கடந்த மூன்று மாதங்களாக நிலவி வந்த ஆசிரியர்களின் சம்பள பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.