WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 16, 2016

பி.இ. கலந்தாய்வு: ஏப்ரலில் விண்ணப்ப விநியோகம்?

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பி.இ. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகத்தை முன்கூட்டியே ஏப்ரலில் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் 2014-இல் மே 3-ஆம் தேதியும், 2015-இல் மே 6-ஆம் தேதியும் தொடங்கியது.
இந்த நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 19-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இதனால், மே 16 முதல் 19 வரை பெரும்பாலான மையங்களில் விண்ணப்ப விநியோகமும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதும் தடைப்படும். இதன் காரணமாக விண்ணப்ப விநியோகத்தை முன்கூட்டியே, ஏப்ரல் 25-இல் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருப்பதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆன்-லைனில் பதிவிறக்கம்: இதுதவிர, கடந்த ஆண்டைப் போலவே கலந்தாய்வு விண்ணப்பங்களை w‌w‌w.a‌n‌na‌u‌n‌i‌v.‌e‌d‌u‌t‌n‌ea என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கமும் செய்து கொள்ள முடியும். கலந்தாய்வு ஜூன் மூன்று அல்லது நான்காவது வாரத்தில் தொடங்கப்பட்டு, ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டுவிடும். ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.