WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 16, 2016

மூன்று 'ஆப்ஸ்'களுக்கு ராணுவம் தடை.

                                     


மூன்று மொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த நமது ராணுவம் தடை விதித்துள்ளது. பாக். உளவு பார்ப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்த ஆப்ஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
கூகுள் பிளே ஸ்டோர் மூலம் வீசாட், ஸ்மெஷ், லைம் ஆகிய 'ஆப்ஸ்'கள் பெருமளவு பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. இதில் ஸ்மெஷ் என்ற ஆப்ஸ் 'வாயிலாக பாகிஸ்தான் ராணுவம் நமது ராணுவத்தினரை உளவு பார்ப்பதாக சமீபத்தில் புகார் கிளம்பியது. இதையடுத்து கூகுள் வலைதளம் தனது பிளே ஸ்டோரில் இருந்த அதனை நீக்கியது.பதன்கோட் விமானப்படை தாக்குதல் 

இந்தியாவில் ராணுவ ரகசிய தகவல்கள், இந்திய ராணுவம் மேற்கொள்ளும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைள், எல்லையில் ராணுவ வீரர்களின் நடவடிக்கைகள், உயர் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல்களை பாகிஸ்தான் ராணுவம் எளிதில் வேவு பார்க்கிறது. இந்த ஆப்ஸ் மூலமாக தான் கடந்த ஜனவரி மாதம் பதன்கோட் விமானப்படை தளம் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.. அரேங்கேற்றியுள்ளது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.

ராணுவம் தடை

இதே போன்று மற்ற இரு 'ஆப்ஸ்'கள் மூலம், ராணுவம் தொடர்பான டெக்ஸ்ட் மெசேஜ்கள், புகைப்படங்கள், வரைபடங்களையும் பாக். வேவு பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ராணுவத்தின் முப்படை பிரிவினரும், 'ஸ்மெஷ், வீசாட், லைம்'' ஆகிய ஆப்ஸ்களையும் கருப்புபட்டியலில் வைத்து உத்தரவிட்டதுடன், ஸ்மார்ட் போன்கள் மற்றும் நோட்பேடுகளை பயன்படுத்தும் ராணுவத்தினர் இந்த ஆப்ஸ்களை உடனடியாக நீக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.