WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, March 7, 2016

ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


ஆசியர்கள் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.தகுதித் தேர்வை ரத்து செய்யுமாறு கிருஷ்ணகிரியை சேர்ந்த
ஆசிரியர் ஜோதி என்பவர் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்திருந்தார். மனுவை பரிசீலித்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் ஜோதிக்கும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. மத்திய அரசின் 2009ம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக உள்ளது. அதன்படி, 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதில் எந்த விதிவிலக்கும் இல்லை.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.