WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, March 17, 2016

நெடுந்தூர ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணி வழங்கக்கூடாது ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

"அதிக தூரமுள்ள ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் பணி வழங்க கூடாது,' என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. மாவட்டத்
தலைவர் மஸ்அமலநாதன், செயலாளர் முத்துப்பாண்டியன், பொருளாளர் குமரேசன் தேர்தல் ஆணையத்திற்கு னுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஓட்டு உள்ள ஓட்டுச்சாவடிகளில் தவிர்த்து, அருகில் உள்ள மையங்களில் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி வழங்க வேண்டும். அவர்கள் ஓட்டுச்சாவடி சென்று வர வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கடந்த தேர்தல்களில் குளறுபடியால் பல ஆசிரியர்கள் தபால் ஓட்டு அளிக்க முடியவில்லை. இந்த முறை முன்கூட்டியே தபால் ஓட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது அவர்கள் பணிபுரியும் ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டளிக்கும் வகையில் பணிச்சான்று வழங்க வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார், வயது முதிர்ந்தோருக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க வேண்டும். கடந்த தேர்தலில் ஆசிரியர்களை அதிகாரிகள் தரக்குறைவாக நடத்தியதால் பிரச்னை ஏற்பட்டது. அதனை தவிர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.