உயிரியல் தேர்வு எளிமையாக இருந்ததாக, பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வில் நேற்று நடந்த உயிரியல் தேர்வு குறித்து வால்பாறை பியூலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கருத்து: காயத்ரி: உயிரியல் தேர்வை பொறுத்தவரை, ஆசிரியர்கள்
சொல்லித்தந்த பாடத்திலிருந்து பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டதால், விடைகளை விரைவாக எழுதினோம்.ஒன்று, ஐந்து மற்றும் பத்து மதிப்பெண்களுக்கான கேள்விகள் ஈசியாக இருந்தது.நிச்சயம் நல்ல மதிப்பெண்களை பெறுவேன்.கலைவாணி: உயிரியல் தேர்வை பொறுத்த வரை, படித்த பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், தேர்வை எளிதில் எழுதினோம். இது வரை நடந்ததில், வேதியியல் தவிர மீதமுள்ள அனைத்து தேர்வுகளும் மிகவும் எளிமையாகவே இருந்தன. சென்டம் வாங்குவது உறுதி.தர்சன்: பள்ளியில் ஆசிரியர்கள் சொல்லித்தந்த பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், வினாத்தாளை பெற்றவுடன் விறுவிறுப்பாக தேர்வை எழுதினோம். உயிரியல் தேர்வை பொறுத்த வரை ஒன்று மற்றும் பத்து மதிப்பெண்களுக்கான கேள்விகள் சில மட்டும் கஷ்டமாக இருந்தன. இருப்பினும் தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதியுள்ளேன். தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.