WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 25, 2016

பல்கலை, கல்லூரிகளில் முன்கூட்டியே தேர்வு!

                                       


சட்டசபை தேர்தலால், அனைத்து பல்கலைகளிலும் முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் மே, 16ல் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

’மே முதல் வாரத்திற்குள் கல்லூரி மற்றும் பல்கலை தேர்வுகளை முடித்து, கல்லூரி கட்டடங்களை தேர்தல் பணிக்கு ஒப்படைக்க வேண்டும்’ என, தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளதால், அதன்படி செயல்பட தமிழக அரசும் உத்தரவிட்டுள்ளது.

எனவே, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லூரிகள், 40 ஆர்கிடெக் கல்லூரிகள்; தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 100க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகள்; கல்லூரி கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முன்கூட்டியே செமஸ்டர் தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கமாக, மே இறுதி வாரம் வரை, செமஸ்டர் தேர்வுகள் நடக்கும். ஆனால், இந்த முறை மே, முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடித்து விடுமுறை விடப்பட உள்ளது. அதற்காக, பாடங்களை விரைந்து முடிக்க, பேராசிரியர்களுக்கு கல்லூரி நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.