குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று (ஏப்.20) வெளியிட்டது.
அதன்படி, 4 ஆயிரத்து 33 பேர் பிரதானத் தேர்வினை எழுத தகுதி படைத்துள்ளனர். பிரதானத் தேர்வு ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 1 தொகுதியில் 74 காலிப் பணியிடங்கள் இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8-இல் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 696 பேர் கலந்து கொண்டனர்.
இந்தத் தேர்வின் முடிவுகள் புதன்கிழமை (ஏப்.20) வெளியிடப்பட்டன. இதிலிருந்து முதன்மைத் தேர்வுக்கு 4 ஆயிரத்து 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வு வரும் ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
இதேபோன்று உதவி புள்ளியியல் ஆய்வாளர், நூலகர்-உதவி நூலகர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. புள்ளியியல் பணிக்கு 54 பேரும், நூலகர் பணிக்கு 71 பேரும் தாற்காலிமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.