மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நாளை அறிவித்தபடி நடைபெறும் என்றும் தள்ளிவைக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக
கூறியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வை (என்.இ.இ.டி.) 2 கட்டங்களாக மே 1-ம் தேதியும், ஜூலை 24-ம் தேதியும் சி.பி.எஸ்.இ., நடத்த உத்தரவிட்டது. தேர்வு முடிவுகளை ஆகஸ்டு 17-ம் தேதி வெளியிட வேண்டும் என்றும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்றும் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த பொது நுழைவுத்தேர்வால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில மற்றும் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடங்களுக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பதால் தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் எந்த மாற்றமும் மேற்கொள்ள முடியாது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகுங்கள், முன்பு அறிவித்த தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.