WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 19, 2016

எஸ்.எஸ்.எல்.சி.: கணிதத்துக்கு 4 கருணை மதிப்பெண்கள்: தேர்வுத் துறை அறிவிப்பு.

தமிழகத்தில் எ முழுவதும் ஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வு கடந்த வாரத்துடன் முடிந்தது. 16-ஆம் தேதி முதல் விடைத் தாள் திருத்தும் பணி
தமிழகம் தொடங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு மையங்களில் விடைத் தாள் திருத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் தொடங்கியது. கணிதம் வினாத் தாளில் இடம் பெற்றிருந்த 47-ஆவது கேள்விக்கு வரைபடம் வரைந்து அதன் மூலம் சமன்பாடு கண்டுபிடிக்க வேண்டும். இது 10 மதிப்பெண் கேள்வியாகும். இதில், சமன்பாடுக்கான கேள்வியில் எழுத்துப் பிழை இருந்தது. இதையடுத்து, அந்த சமன்பாட்டை மாணவ- மாணவியர் எழுத முயன்றிருந்தால் 4 மதிப்பெண் அளிக்க வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் மாணவ- மாணவியர் வரைபடம் வரைந்திருந்தால் மட்டுமே அதற்கு 6 மதிப்பெண் அளிக்கப்படும் எனவும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.