மத்திய பல்கலைக்கழகங்களில் 5,900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; ஸ்மிருதி ராணி தகவல் புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் 5,928 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை மந்திரி ஸ்மிருதி ராணி தெரிவிக்கையில், மொத்தம் 16,600 ஆசிரியர் பணிகள் மத்திய பல்கலைக்கழங்களில் இருப்பதாகவும் ஆனால் அதில் 10,672 பணிகள் மட்டுமே இதுவரை நிரப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 5,928 பணிகள் காலியாக இருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, எஸ்.டி பிரிவில் 112 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மொத்தம் உள்ள 34,272 ஆசிரியர் அல்லாத பணிகளில் 10,015 பணிகள் இன்னும் நிரப்படாமலேயே இருப்பதாகவும் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.