WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, April 1, 2016

மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் எப்போது?



                                              



இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஏப்., 15ல் துவங்குகிறது.

அதே நேரத்தில், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்ப வினியோகம் எப்போது துவங்கும் என, மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர். பிளஸ் 2தேர்வுகள், இன்றுடன் முடிகின்றன. ஏப்ரல் மாத இறுதியில், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜி., படிப்பு களுக்கான விண்ணப்ப வினியோகம், ஏப்., 15ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. 

பொதுவாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகே, இன்ஜி., படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கும். இன்னும் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் குறித்து, முறையான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

எப்போது இந்த அறிவிப்பு வெளியாகும் என, மருத்துவ படிப்பில் சேர ஆர்வமுடன் உள்ள மாணவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தேதி முடிவாகி விட்டது. ஒப்புதல் பெற்று, ஓரிரு நாளில் தகவல் வெளியிடப்படும்&' என, மருத்துவ கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.