WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, April 10, 2016

'செட்' தேர்வு ரிசல்ட் தாமதம்:' நெட்' தேர்வு எழுத முடியுமா?

தமிழக அரசு நடத்திய, உதவி பேராசிரியர் ஆவதற்கான தகுதி தேர்வான, 'செட்' தேர்வு முடிந்து, இரண்டு மாதங்கள் நெருங்கும் நிலையில், இன்னும்
விடைக்குறிப்பு வெளியிடவில்லை. எனவே, மத்திய அரசு நடத்தும், 'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தேர்வு அல்லது மாநில அரசின்,'செட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இதில், 'நெட்' தேர்வு ஆண்டுக்கு, இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பரில் நடத்தப்படுகிறது. 'இந்த ஆண்டுக்கான தேர்வு, ஜூலை, 10ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதற்கு ஏப்., 12 முதல், மே, 12 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால், தமிழகத்தில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் கடந்த பிப்ரவரியில், 'செட்' தகுதி தேர்வு நடந்தது. தேர்வை நடத்திய அன்னை தெரசா மகளிர் பல்கலை, இந்த தேர்வுக்கான விடைத் திருத்தத்தைக் கூட துவங்கவில்லை. மேலும், 'கீ ஆன்சர்' எனப்படும் விடைக்குறிப்பு கூட வெளியிடப்படவில்லை. மாநில அளவிலான தகுதி தேர்வான செட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், தேசிய அளவிலான தகுதி தேர்வான நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.