WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 14, 2016

ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்த கோரிக்கை!

தேர்தல் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல், 24ம் தேதி தொடங்க உள்ள நிலையில், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வுகளையும் அதற்கு முன்பே நடத்தி முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், பிளஸ் 1 மற்றும் ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ தேர்வு நடந்து வருகிறது. இவையும், ஏப்ரல் 21ம் தேதியுடன் நிறைவு பெறுவதால், அன்று முதல் கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு, முதல்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 24ம் தேதி தொடங்குகிறது. ஆனால், தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல், 22ம் தேதிதான் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் பயிற்சிக்கு கணிசமான ஆசிரியர்கள் செல்லும் நிலையில், பள்ளி நடத்துவதே தலைமை ஆசிரியர்களுக்கு கடும் சிரமமாக உள்ள நிலையில், தேர்வுகளை நடத்துவது கடும் சவாலாக உள்ளது. இதனால், பல பள்ளிகளில் தேர்வுகள் பெயரளவில் நடத்தப்படுகிறது. இதை தவிர்க்க ஏப்ரல், 24ம் தேதிக்கு முன்னதாக தேர்வுகளை முடித்துக் கொள்ளவும், அதன் பின் ஓவியம், உடற்கல்வி உள்ளிட்டவைகளுக்கு வகுப்புகள் நடத்திக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்தால், தேர்வுகளும் உபயோகமாக நடத்தலாம் என தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.