WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 21, 2016

அரசு ஊழியர்களுக்குஅகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஆகியோருக்கு, 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம், அகவிலைப்படி உயர்த்தப்படும். அதை தொடர்ந்து, மாநில அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படியை, மாநில அரசுகள் உயர்த்தும். இந்த ஆண்டு ஜனவரியில் உயர்த்த வேண்டிய அகவிலைப்படியை, மத்திய அரசு மார்ச் மாதம், 6 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும், 6 சதவீதம் அகவிலைப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அகவிலைப்படி, 119 சதவீதத்தில் இருந்து, 125 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு அலுவலர்களுக்கு, 366 முதல், 4,620 ரூபாய் வரை, கூடுதலாக கிடைக்கும். அகவிலைப்படி உயர்வு, ஜனவரி, 1ம் தேதி முதல் கணக்கிட்டு, ரொக்கமாக வழங்கப்படும். இதன் மூலம், 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.