மொழிப்பாடத்தில் ஒரு தாள் நடைமுறையை அமல்படுத்த வேண்டுமென, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
வலியுறுத்தியுள்ளது.
மாநிலத் துணைத் தலைவர் சேதுச்செல்வம், மாவட்டச் செயலாளர் இளங்கோ கூறியதாவது:
புதிய பென்ஷன் திட்டத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவை கலைத்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டதை அமல்படுத்த வேண்டும்.
2006 ஜூன் 1ல் பணி வரன்முறை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதற்கு முன் பணியாற்றிய 2 ஆண்டு காலத்தையும் சேர்த்து கணக்கிட வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட பதவி உயர்வு பணியிடங்களை மற்றவர்களுக்கு கொடுப்பதை கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை போன்று உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். விரும்பும் ஆசிரியர் பயிற்றுனர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும்.
பொதுமாறுதல் கவுன்சிலிங்கை மே, ஜூன் மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். மொழிப்பாடத்தில் ஒரு தாள் நடைமுறையை அமல்படுத்த வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.