ஒருவித பதற்றத்துடனே காணப்பட்ட பிளஸ் 2 மாணவர்கள், நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்ததால் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.
டென்ஷன்... படபடப்பு... பரபரப்பு... எதிர்பார்ப்பு... என கடந்த மாதம் முழுவதும் ஒருவித பதற்றத்துடனே காணப்பட்ட பிளஸ் 2 மாணவர்கள், நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்ததால் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். பள்ளிப் படிப்பு முடிந்து அடுத்த கட்டமாக கல்லூரி வாழ்க்கையைத் தொடரப்போகும் மாணவர்களிடையே மகிழ்ச்சி கரைபுரண்டாலும், நண்பர்கள், தோழிகளைப் பிரிகிறோமோ என்கிற கவலையையும் அவர்களின் முகத்தில் காண முடிந்தது.
நினைத்தபடி சிறப்பாக தேர்வு முடிந்த சந்தோஷத்தைக் குதூகலத்துடன் செல்பி எடுத்துக்கொள்ளும் சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், தோழிகள் மீது ‘ஸ்நோ ஸ்பிரே’ பீய்ச்சியடித்து மகிழும் மாணவிகள், சாந்தோம் ரோசரி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவிகளின் உற்சாகக் கொண்டாட்டம் என நீங்களும் அவர்களின் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.