தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணி வாய்ப்பு குறைந்ததாலும், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டாக மாற்றியதாலும், அப்படிப்பின் மீதான ஆர்வம் வெகுவாக சரிந்துள்ளது.
மாணவர் சேர்க்கை நடத்த முடியாத பல பி.எட்., கல்லுாரிகள் நடப்புகல்வியாண்டுடன் மூடுவிழா நடத்தவும் தயாராகி வருகின்றன. தமிழ்நாடுகல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும், 726 பி.எட்.,கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசு பள்ளிகளில், 50 ஆயிரத்துக்கும்மேற்பட்ட பி.எட்., முடித்தவர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பணியிடம்வழங்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட்., படிப்பதில் மாணவ, மாணவியரிடையே ஆர்வம் அதிகமாக இருந்தது.அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விடவும் அதிகம் கொடுத்து, படிக்கவும் போட்டிகள்இருந்தது. ஆனால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஆண்டுக்காண்டுஉபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால், கடந்த இரு ஆண்டுகளாக புதிதாக ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படவில்லை. மேலும்எதிர்காலத்தில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கே வேலை உத்தரவாதம் இல்லாத நிலைகாணப்படுகிறது. இந்நிலையில், கடந்த கல்வியாண்டில், பி.எட்., படிப்பு ஓராண்டிலிருந்து இரண்டுஆண்டுகளாக மாற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் கூடுதல் பாடங்கள், கூடுதல் கல்விக்கட்டணம்உள்ளிட்டவைகளால், மாணவர்களிடையே ஆர்வம் வெகுவாக சரிந்துள்ளது. கடந்த கல்வியாண்டிலேயே, 60 சதவீத இடங்களே நிரம்பின. வரும் கல்வியாண்டில், 40 சதவீத இடங்கள் கூட நிரப்ப முடியாத நிலைவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பி.எட்., கல்லுாரிகளை லாபகரமாக நடத்துவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதனால், பலகல்லுாரி நிறுவனங்கள் பி.எட்., கல்லுாரிகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, கலை அறிவியல் மற்றும் வேறுசில பாடங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.