WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, May 7, 2016

மே 17-இல் பிளஸ் 2, 25-இல் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.


பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 17-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 25-ஆம் தேதியும் வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்
பதிவு தினமான மே 16-ஆம் தேதிக்கு மறுநாள், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவடைந்தது. இதை தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 8.72 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதுபோல், பத்தாம் வகுப்புத் தேர்வை 11.20 லட்சம் பேரும் எழுதியுள்ளனர். இந்த நிலையில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 27-ஆம் தேதியும் நிறைவு பெற்றது. இணையதள முகவரிகள்: இதைத் தொடர்ந்து, பிளஸ் 2 தேர்வு முடிவு மே 17-ஆம் தேதி காலை 10.31 மணி முதல் 11 மணிக்குள் வெளியிடப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 25-ஆம் தேதி காலை 9.31 மணி முதல் 10.00 மணிக்குள் வெளியாகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டினைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறியலாம். இதுதவிர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தேசிய தகவல் மையங்கள் (National Informatics Centres), அனைத்து மாவட்ட மைய, கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இலவசமாக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவு எப்போது? சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி முதல், ஏப்ரல் 22-ஆம் தேதி வரையும், பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 1- ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையும் நடைபெற்றன. சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 20-ஆம் தேதிக்குப் பிறகும், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்தமாத இறுதியிலும் வெளியாகும் என்று சிபிஎஸ்இ மண்டல அலுவலர் கே.சீனிவாசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.